திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 22 பேர் மீது 83 வழக்குகள் உள்ளன சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்குகள் இருப்பதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் 98 பக்க ஊழல் பட்டியலை கொடுத்துள்ளார். யாரோ எழுதி கொடுத்ததை புரிதல் இல் லாமல் அவர் கொடுத்துள்ளார்.

முதல்வர் மீதான குற்றச்சாட்டு வழக்கில், ஒப்பந்தத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. அதிமுகவின் எதிரியான திமுக தொடுத்த வழக்கு இது. ‘அரசியலில் நேர் எதிராக உள்ள கட்சிகள், அரசிய லுக்காக வழக்கு தொடுக்கக் கூடாது’ என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பே உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் அதாவது ஒப்பந்ததாரர்கள் வழக்கு தொடர்ந்துள் ளாரா எனக் கேட்டு, அவ்வழக்குக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி வாங்கிய கார்

துணை முதல்வர் மகன் கார் வாங்கியது குறித்து புகார் அளித் துள்ளனர். அன்று, உதயநிதி ‘ஹம்மர்’ காரை, ஸ்டாலின் வீட்டு முகவரியில் வாங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக காங்கிரஸ் அரசு வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தது. பின்னர் அவ் வழக்கு மூடி மறைக்கப்பட்டது. என்றைக்கு இருந்தாலும் அவ் வழக்கு தோண்டி எடுக்கப்படும். இதுகுறித்து அப்போது அதிமு கவில் இருந்த தற்போதைய திமுக மாவட்ட செயலாளர் சேகர்பாபு சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் விசாரணையில் உள்ள அனைத்துக் கட்சியினர் மீதான 368 வழக்குகளில், முன்னாள் அமைச்சர்கள் மீது 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 22 திமுக முன்னாள் அமைச்சர்கள்மீது லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்குகள் உள்ளன. இதில் பல, அவமதிப்பு வழக்குகள் என்பதை யும் ஒப்புக் கொள்கிறோம். திமுக வின் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப தயாராக இல்லை.

‘ஊழல்’ என்ற பெயரை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் கருணாநிதி. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது திமுகவினர் ஆளு நரை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்