போக்குவரத்து விதிக்கு புறம்பாக வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர்கள் அகற்றம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பாக வாகனங்களில் பொருத்தப் பட்டிருந்த பம்பர்கள் அகற்றப் பட்டன.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அன்புச்செல்வன், மாணிக்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பாக சரக்கு வாகனங்கள், சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தப் படும் வாகனங்களில், பொருத்தப் பட்டிருந்த ‘புல் பார்’ பம்பர்களை அதிகாரிகள் அகற்றி, பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது: மோட்டார் வாகனச் சட்டத்துக்குப் புறம்பாக வாகனங்களில் பொருத் தப்பட்டுள்ள ‘புல்பார்’ பம்பர்கள் அகற்றப்பட்டு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வாகனங்களில் பிரேக் லைட், இண்டிகேட்டர் லைட், பார்க்கிங் லைட், வேகக் கட்டுப்பாட்டு கருவி ஆகியவை வேலை செய்கிறதா, பதிவு எண் மோட்டார் வாகன விதிகளின்படி எழுதப்பட்டுள்ளதா என்பது குறித்து வாகனத் தணிக்கை செய்யப்பட்டு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்