கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களின் முதல்நிலை சரி பார்க்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 4026 பேலட் யூனிட், 3082 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 3329 விவிபேட் உள்ளிட்ட 10437 இயந்திரங்களில் முதல் நிலை சரி பார்க்கும் பணியை பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம்(22-ம் தேதி) வரை 7030 இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டன. இதில், 19 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 207 கன்ட்ரோல் யூனிட்கள், 67 விவிபேட் இயந்திரங்களில் குறைபாடு உள்ளதை தொழில்நுட்ப பொறியாளர்கள் கண்டறிந்தனர். மீதமுள்ள இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு, வி.வி.பேட் இயந்திரங்களின் முதல் நிலை சரி பார்க்கும் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்