திருவாரூர் அருகே உள்ள மடபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச் சந்திரன்(50) இவர், தனியார் நிறு வனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் கொரடாச் சேரி அருகே நேரிட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார்.
இதில், அவரது வலதுகால், இடுப்பு பகுதியில் மூன்று துண்டுகளாக எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக திரு வாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரவிச்சந்திரன் அனுமதிக் கப்பட்டார். அவருக்கு எலும்பு மருத்துவர்கள் ராமகிருஷ் ணன்,அரவிந்தன், மயக்க மருத்துவர்கள் சுமதி, மோகன், கரிகாலன், செவிலியர் சங்கீதா மற்றும் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். சுமார் ஐந்தரை மணி நேரம் ரவிச்சந்திரனுக்கு தொடர்ச்சியாக 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்து 45 நாட்களுக்கும் மேலான நிலையில், ரவிச்சந்திரன் நேற்று மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரவிச்சந்திரன் சகஜ நிலைக்கு திரும்பி விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை கண்காணிப்பாளர் என்.விஜயகுமார் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரி வித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago