தி.மலையில் மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தி.மலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக வரப்பெற்ற புகாரின்பேரில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில், நகர காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் தனிப்படை காவல் துறையினர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், தி.மலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பாக்கெட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பாரஷராம் (32), சித்திக் (38) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனை
தி.மலை சமுத்திரம் காலனி பகுதி யில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நளினி (30), சகுந்தலா (72), கலை வாணி (52), அருண்குமார் (27), ஆறு முகம் (32), சுகிசிவம் (32) ஆகியோர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago