மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் திருப்பூர் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் முக்கிய செயலாக்கமான மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் (PGP), திருப்பூர் மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்ட செயலாக்கப் பகுதிகளான உடுமலை, குண்டடம், திருப்பூர், அவிநாசி மற்றும் பொங்கலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 122 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

மக்கள் பங்கேற்புடன் கூடியவளர்ச்சி திட்ட தொடர் நிகழ்வுகளான ஆயத்தக் கூட்டம் நடத்துதல், கிராம நடைபயணம், இளைஞர்கள், உற்பத்தியாளர் களுக்கான இலக்கு நோக்கிய குழு விவாதம் போன்ற செயல்பாடுகள் ஒவ்வோர் ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்வுகளின் வெளிப்பாடாக ஒவ்வோர் ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்படும் தொழில்கள், தொழில் புரிவதற்கான வாய்ப்புகள், உற்பத்தியாளர்கள், உற்பத்தி தொழில் குறித்த விவரங்கள் அனைத்தும் ஊர் பொதுமக்கள், தொழில்முனை வோர் மற்றும் அரசு அலுவலர்கள் மூலமாக பெற்று தொகுக்கப்பட்டு, அதன் மூலமாக கிராம முதலீட்டுத் திட்டத்தை தயாரித்து கிராமக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும்.

புதிதாக மேற்கொள்ளப்படும் தொழில்கள், தேவைப்படும் வசதி கள், தொழிலுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள், தரவுகளின் அடிப்படையில் பெறப்படும். மேற்கண்ட நிகழ்வுகளில் ஊரக புத்தாக்க திட்ட செயலாக்கப் பகுதியிலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தொழில்முனைவோர், பால் உற்பத்தியாளர்கள், விவசாய பெருமக்கள், இளைஞர்கள் ஆகியோர் கிராம முதலீட்டுத் திட்டத்தில் உரிய தகவல்களை அளித்து, திட்ட செயலாக்கத்தில் பங்கேற்கலாம்" என்று குறிப் பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்