இதில், ஜீவானந்தம் மீது ஏற்கெனவே வடக்கு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கும், சதாம் உசேன் மீது நான்கு திருட்டு வழக்குகளும், நௌஃபல் மீது பல்லடம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கும், கோவை மாநகரில் மூன்று திருட்டு வழக்குகளும், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகளும் உள்ளன. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவு நகல்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் அளிக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago