நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் கரோனா தொற்றுகாலத்தில் ரத்ததானம் செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரத்ததானம் செய்த 38 பேருக்கு,மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார்.
நீலகிரி மாவட்ட கிளை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலமாக ஒவ்வொரு மாதமும் ரத்ததான முகாம்கள் நடத்தி அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளுக்கு உதவி செய்து வருகிறது. கரோனா தொற்று காலத்திலும்கூட, புனிதசூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 7, கோத்தகிரி தேயிலை தொழிற்சாலை ஊழியர்கள் 31 பேர் என மொத்தம் 38 பேர் ரத்த தானம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் மோரீஸ் சாந்த குரூஸ் மற்றும் சங்க உறுப்பினர்கள் ரவி, தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago