ராமநாதபுரத்தில் வெளிநாட்டுப் பறவை களை வேட்டையாடிய இருவரை வனத் துறையினர் கைதுசெய்தனர்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதியில் வனச்சரக அலுவலர் சு.சதீஷ் தலைமையில் வனவர் ராஜசேகரன் உள்ளிட்ட வனத் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது பறவைகளை வேட்டையாடிய ராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த ரெத்தினம் (50), மாரி (40) ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஊசிவால் வாத்துகள் 17 மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இதில் 15 பறவைகள் உயிருடனும், 2 பறவைகள் இறந்த நிலையிலும் இருந்தன. இதையடுத்து வேட்டையாடிய இருவர் மீதும் வன உயிரினக் குற்ற வழக்குப் பதிவுசெய்து வன உயிரினக் காப்பாளர் அ.சோ.மாரிமுத்து முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இருவருக்கும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
15 ஊசிவால் வாத்துகளை ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயப் பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago