நாமக்கல் மாவட்டம் உன்னியூர் ஊராட்சியில் அமைந்துள்ள முருங்கை நீரேற்றுப் பாசன மின்மோட்டாரை சேதப்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மோகனூர் அருகே உன்னியூர் ஊராட்சியில் முருங்கை நீரேற்றுப் பாசனம் அமைந்துள்ளது. இதன்மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் நீரேற்றுப்பாசனத்தை சுற்றி அமைந்துள்ள மின்வேலி மற்றும் மின்மோட்டாரை சிலர் சேதப்படுத்தியுள்ளனர்.
இதைக் கண்டித்து நீரேற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை மோகனூர் - காட்டுப்புத்தூர் சாலையில் முருங்கை மின்மோட்டார் அமைந்துள்ள பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மோகனூர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்மோட்டாரை சேதப்படுத்தி யவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதி யளித்தனர். இதையேற்று சாலை மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் மோகனூர் - காட்டுப்புத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago