ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கோட்டை தெப்பக்குளம் மைதானத்திற்கு பின்புறம் உள்ள அழகர்சிங்கர் வீதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 1887-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி கணிதமேதை ராமானுஜன் பிறந்தார். அவர் பிறந்த இல்லம் அமைந்துள்ள வீதிக்கு ராமானுஜன் பெயர் சூட்டப்பட்டு, அப்பகுதியில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது. கணிதமேதை ராமானுஜனின் 133-வது பிறந்தநாளையொட்டி, வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ராதாமணிபாரதி, சங்க செயலாளர் பாரதி, பொருளாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை இணைத்து கணிதமேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், ஈரோடு சம்பத்நகரில் உள்ள நவீன நூலகத்திற்கு ராமானுஜன் பெயர் சூட்டவேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago