சங்கரன்கோவிலில் சுரண்டை சாலையில் உள்ள ஏஞ்சல் பள்ளி மைதானத்தில் தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரும், அதிமுக மகளிரணி துணைச் செயலாளருமான வி.எம்.ராஜலெட்சுமி இல்ல விழா இன்று காலை 9.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இந்த விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்கின்றனர். விழாவுக்காக 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் முதல்வருக்கு தென்காசி மாவட்ட எல்லையான தேவர்குளத்தில் இருந்து வழி நெடுகிலும் அதிமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர். பூரண கும்ப மரியாதையுடன் ஒயிலாட்டம், தப்பாட்டம், செண்டை மேள தாளங்களுடன் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி சாலை, கோவில்பட்டி சாலை, ராஜபாளையம் சாலை, புளியங்குடி சாலை, சுரண்டை சாலை என, அனைத்து சாலைகளின் இரு புறங்களிலும் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே வரவேற்பு வளைவுகள், வாழை மர தோரணங் கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழா நடைபெறும் மேடை அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐஜி முருகன் தலைமையில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணாசிங் ஆகியோர் செய்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்ற முதல்வருக்கு பாளையங்கோட்டை கேடிசி நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது முதல்வர் பேசியதாவது: எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் யுத்தத்தில் மாபெரும் வெற்றிபெறு வோம். அதிமுக அரசு மீது பொய் யான அறிக்கையை ஆளுநரிடம் திமுக கொடுத்துள்ளது. இதற்கெல்லாம் இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார் கள். லட்சக்கணக்கான தொண் டர்களின் உழைப்பால் உருவான அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது என்றார்.
திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்பதுரை, நாராயணன் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago