தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூரில் பாஜக சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கடையம் மேற்கு ஒன்றிய தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாடசாமி, பாலகுருநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், வாசுதேவநல்லூரில் ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி தலைமையில் வேளாண் சட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாரதி, பாண்டித்துரை, மாவட்ட தலைவர் ராமராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago