குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை அழைத்து எஸ்பி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் இன்று நடைபெறும் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி இல்ல விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி, முதல்வர் வரும் வழி மற்றும் விழா நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சங்கரன் கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களில் குற்ற சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வரும் அனைவரும் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் நிலையத் துக்கு வரவழைக்கப்பட்டனர்.

அவர்களிடம் எஸ்பி சுகுணாசிங் பேசும்போது, “நீங்கள் அனைவரும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் உங்கள் மீது குற்ற சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு, உங்கள் செயல்கள் அனைத்தும் காவல்துறையினரால் கண் காணிக்கப்பட்டு வருகிறது.

நீங்கள் ஏதேனும் குற்றம் புரிந்தால் உங்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்படக்கூடும். இனி வரும் காலங்களில் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்தால் உங்கள் மீது உள்ள குற்ற சரித்திர பதிவேட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்