தி.மலையில் கடந்த 50 ஆண்டுகளாக குப்பைக் கிடங்குக்கு தீர்வு இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலை அருகே புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கூட்டம் நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. அதன் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “தமிழகம் தலை நிமிர வேண்டும். தமிழகத்தை சீரமைத்து மாற்றத்தை நிகழ்த்தி காட்ட வந்திருக் கிறோம். நாங்கள் உங்கள் கருவி. மக்களாகிய நீங்கள்தான் நாயகர்கள். ஜவ்வாது மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. செய்யாற்றில் மணல் கொள்ளை தொடர்கிறது.
தி.மலையில் கடந்த 50 ஆண்டு களாக குப்பை கிடங்குக்கு தீர்வு இல்லை. விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மாண வர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அவர்களது கண் களுக்கு தெரியவில்லை. அவர் களுக்கு சுவீஸ் வங்கியில் உள்ள கணக்கு மட்டும்தான் கண்களுக்கு தெரிகிறது.
பொதுமக்கள், கீழே உள்ளனர். அது அவர்களுக்கு தெரியவில்லை. எங்களுக்கு தெரிகிறது. அவர்களது வாழ்க்கை நிலை மேம்பட வேண்டும். முறையான பாசன வசதி இல்லை. அதற்கு மக்கள் தொகைதான் காரணம் என்பதை ஏற்க முடியாது. நீர்மேலாண்மை கவனிக்கப்பட வில்லை. குடிமரா மத்து பணியை கண்டுபிடித்தவர் போல் முதல்வர் பழனிசாமி பேசுகிறார்.
சோழர்கள், நாயக்கர்கள் காலத்தில் இருந்த நீர் மேலாண்மையை நாங்கள் மீட்டெடுப்போம்.
தெலங்கானா மாநிலத்தில் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த அம்மாநில முதல்வர், நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நாங்கள் முதல் முறையிலேயே நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்துவோம்.
நமது இலக்கை வீடு வீடாக சென்று மக்களுக்கு நினைவு படுத்துங்கள். கடைசி நேரத்தில், அவர்கள் கண்கட்டி வித்தையை காட்டி விடுவார்கள். ரூ.5 ஆயிரத்துக்கு 5 ஆண்டுகளை வீணடித்து விட வேண்டாம் என கூறுங்கள்.
தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு ஆவணம் செய்ய, எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார்.
ஜவ்வாது மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago