செய்யாறு அருகே அடகு நகையை திருப்பித் தர மறுத்த தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் மேலாளரை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக் கொண்டு குடும்பத்துடன் விவசாயி நேற்று தற்கொலைக்கு முயன்றார்.
தி.மலை மாவட்டம் செய்யாறுஅடுத்த மதுரை கிராமத்தில் வசிப் பவர் விவசாயி காமராஜ். இவர், வாழ்குடை கிராமத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு குடும்பத்துடன் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து விவசாயி காமராஜ் கூறும்போது, “வாழ்குடை கிராமத் தில் உள்ள ஒரு தேசிய மயமாக் கப்பட்ட வங்கியில் 8 பவுன் நகையை அடமானம் வைத்து கடந்த 17-07-2019-ம் தேதி ரூ.1.20 லட்சம் கடன் பெற்றேன். அடகு நகையை மீட்க, வங்கியில் நேற்று (நேற்று முன் தினம்) வட்டியுடன் சேர்த்து ரூ.1,34,450 லட்சம் செலுத் தினேன். நகையை கொடுக்க வில்லை. மறுநாள் வருமாறு தெரிவித்தனர். அதன்படி இன்று (நேற்று) சென்றேன்.
அப்போது வங்கி மேலாளர், எனது மகன் கல்விக்காக கடந்த2013-ம் ஆண்டு பெற்ற கடனுக் கான தவணை காலம் முடிந்து விட்டதாகவும், வட்டி மற்றும் அசலுடன் சேர்த்து ரூ.4.20 லட்சத்தை செலுத்தினால், நகையை திருப்பி தருவதாக தெரிவித்தார். படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் என் மகனுக்கு வழங்கிய கல்வி கடனை காரணமாக தெரிவித்து நகையை திருப்பி தர மறுப்பது நியாயம் கிடையாது எனக் கேட்டேன். ஆனால், மேலாளர் என்னை வெளியேற்றிவிட்டார்.
தகவலறிந்து வந்த செய்யாறு காவல் துறையினர் தீக்குளிக்க முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago