வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோட்டையை அழகுபடுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வேலூர் கோட்டையின் உள் பகுதியில் நடைபாதை, பூங்கா, மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், மாநராட்சியின் பல்வேறு பகுதிகளில், பூங்காக்கள், சதுப் பேரியில் குப்பையை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். வேலூர் கோட்டையில் அகழி தூர்வாரும் பணி, சுற்று வட்ட சாலையில் விளக்குகள் அமைத்தல், காவலர் பயிற்சி மைதானத்தை சுற்றியும், கோட்டையின் உள் பகுதியில் 2,950 மீட்டர் நீளம் கொண்ட நடைபாதை அமைக்கும் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பின்னர், வேலூர் ஓட்டேரி ஏரியில் ரூ.13 கோடியில் கரைகள் மீது அமைக்கப்படும் நடைபாதை, பூங்கா பகுதியில் பேட்மிட்டன், கூடைப்பந்து மைதானம், ஸ்கேட்டிங் பயிற்சி மைதானத் தையும் ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
அதேபோல், சதுப்பேரியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில்கொட்டப்பட்டுள்ள குப்பையை தரம் பிரிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்தப் பணி யின் தற்போதைய நிலை குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன், நகர் நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago