வள்ளலார் நகர், திருக்குமரன் நகர் ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலாளர் சேகர் தலைமைவகித்தார். பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, "வள்ளலார் நகர், திருக்குமரன் நகர், மூகாம்பிகை நகர், அமராவதிநகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்காக பதிக்கப்பட்ட குழாய்களில் நீர் கசிந்து, ஆங்காங்கே சாலைகளில் வழிந்தோடுகிறது. அதேபோல, குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது. மழை பெய்தால்சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் சாலைகளுக்கு பதிலாகபுதிய தார்சாலை அமைக்க வேண்டும். வள்ளலார் நகர் மேற்கு பகுதியில்செவ்வாய்க்கிழமை தோறும் காய்கறி சந்தை அமைக்கப்படுகிறது. பொதுமக்களின் நலன்கருதி, அப்பகுதியின் சுகாதாரத்தை மாநகராட்சி பேண வேண்டும். அதேபோல, வாரச் சந்தையில் காய்கறிக் கழிவுகளையும் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். திருக்குமரன் நகர் அரசுப் பள்ளி, அமராவதி நகர் ஆகிய பகுதிகளில் சாலை முழுவதும் குப்பை சிதறி கிடப்பதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அப்புறப்படுத்த வேண்டும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago