லாரி மோதி போக்குவரத்து கழக பொறியாளர் உட்பட 2 பேர் மரணம்

சாலையில் தவறி விழுந்தவர்கள்மீது லாரி மோதி போக்குவரத்துகழக பொறியாளர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே வடக்கனூரை சேர்ந்தவர்என்.நந்தகோபாலகிருஷ்ணன் (41). இவர், அன்னூர் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் பொறியாளராக பணிபுரிந்துவந்தார். இவரது உறவினர் அன்னூர் கஞ்சப்பள்ளியை சேர்ந்தஆர்.ஆனந்தகுமார் (37), விசைத்தறி வேலை செய்து வந்தார். இருசக்கர வாகனத்தில் இருவரும்நேற்று காலை அன்னூரிலிருந்துஅவிநாசி நோக்கி சென்றுள்ளனர்.

அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட நரியம்பள்ளி அருகே, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக கிரேன் மூலமாக குழி தோண்டும் பணிகள் நடைபெற்றுள்ளன. அதில் இருந்து எடுக்கப்படும் மண் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்தது. எதிரில் வரும் வாகனங்களில் மோதாமல் இருக்கமண் மீது ஏறி செல்ல முயன்றபோது, இருசக்கர வாகனம் சரிந்து இருவரும் சாலையில் விழுந்துள்ளனர். அப்போது, அவிநாசியிலிருந்து அன்னூர் நோக்கி சென்ற லாரி அவர்கள் மீது மோதி நிற்காமல் சென்றது.

படுகாயமடைந்த இருவரும் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான திருப்பூர் போயம்பாளையம் பழனிசாமி நகர் பகுதியைச் சேர்ந்தஎம்.விஸ்வநாதன் (38) என்பவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்