காட்டுமன்னார்கோவிலில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கம் சார்பில் நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன், பொருளாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் 6 விவசாயிகள் நாமத்துடன் 25 கிலோ எடை உள்ள நெல் மூட்டையை தலையில் சுமந்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு. நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை, குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்டதால், கொள்முதல் நிலையங்களை திறந்து தரம் பார்க்காமல் 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும். பருத்திக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் வட்டாட் சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago