மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களிடமே கொடுப்பது தான் தமிழக அரசியல் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது:
எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. கூட்டணி குறித்து எங்களின் மத்திய தலைமைக் குழு தான் முடிவு செய்யும். தமிழக முதல்வரை யாருமே விமர்சனம் செய்யவில்லை. காங்கிரஸ் என்பது கட்சியே கிடையாது.
லஞ்ச லாவண்யம்
கூட்டணியை நாங்கள் முறிக்க வில்லை. அதிமுகவினரும் முறிக்கவில்லை. அரசியலில் இளைஞர்கள் கிடையாது. அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும்.தாசில்தார் முதல் தமிழகத்தில் டெண்டர் வழங்குவது வரை லஞ்ச லாவண்யம் உள்ளது. தமிழக அரசியல் என்பது மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களிடம் கொடுப்பதுதான்.
பெட்ரோல், டீசல் விலை குறையும்
2021-ல் வாய்ப்பு கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலை குறை யும். அரசு வருமானத்தை அதிகரிப்பதற்காகத்தான் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago