நீண்ட போராட்டத்துக்குப் பிறகு திருப்பத்தூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது

By செய்திப்பிரிவு

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு திருப்பத்தூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சீர்மிகு நகரத் திட்டத்தில் பஸ் நிலையம் ரூ.3.30 கோடியில் சீரமைக்கப்பட்டது. 54 கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், பல மாதங்களாகப் பஸ் நிலையம் திறக்கப்படவில்லை.

இதையடுத்து வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியதை அடுத்து டிச.4-ம் தேதி சிவகங்கை வந்த முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அதன் பிறகும் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் அனுமதிக்கப்பட்டன.

பஸ்கள் வந்து சென்றதால் பேவர் பிளாக் கற்கள் அமுங்கி ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டன. மேலும் பஸ் நிலையத்துக்குள் உள்ள கடைகள் திறக்கப்படாததால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பஸ் நிலையத்தில் கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்தி உள்ளோம். ஏலம் விட்டதும் கடைகள் திறக்கப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்