கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர், எஸ்பி ஆய்வு

By செய்திப்பிரிவு

எதிர்வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி யில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர் மற்றும் தளி உட்பட 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி, எஸ்பி பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வெங்கடேசன், டிஎஸ்பி சரவணன், தனிப்பிரிவு ஆய்வாளர் அன்புமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்