கணவாய்பட்டியில் புதிய சாலை பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே கணவாய் பட்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்பி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கணவாய்பட்டி கோயிலில் இருந்து தண்ணீர் பள்ளம் கிராமத்திற்கு 2 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னர் தார்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறியதால், புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து புதிய தார் சாலை அமைக்க, தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அதிமுக மாவட்ட செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் தலைமை வகித்தார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி, பணி களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், கிருஷ்ணகிரி ஒன்றியக்குழு தலைவர் அம்சாராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஆஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்