டிச.27 முதல் லாரிகள் ஓடாது

By செய்திப்பிரிவு

தென்மண்டல மோட்டார் வாகன உரிமையாளர்கள் நலச் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. அப்போது அமைப்பின் பொதுச் செயலாளர் ஜிஆர்.சண்முகப்பா, செய்தியாளர்களிடம் கூறியது:

80 கிமீ வேகத்துக்கு மிகாமல் இயங்கும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் ஜிபிஎஸ் கருவிகளை மட்டும் பொருத்த கட்டாயப்படுத்தாமல், ஏஐஎஸ் 140 ஒப்புதல் பெற்ற அனைத்து நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

எஃப்சி எடுக்க தமிழகத்தில் 4 நாட்கள் காத்திருக்க வேண்டி யுள்ளது. ஆனால், கர்நாடகத்தில் 4 மணி நேரத்தில் வழங்குவதால், தமிழகத்திலிருந்து ஏராளமானோர் அங்கு சென்று லாரிகளுக்கு எஃப்சி எடுக்கின்றனர். இதனால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு நேரிடுகிறது.

இந்தியாவிலேயே பிற மாநிலங் களைக் காட்டிலும் தமிழ கத்தில்தான் டீசல் விலை அதிகம். எனவே, டீசல் விலையைக் குறைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை அகற்ற வேண்டும்.

எனவே, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி டிச.27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவே, தமிழக அரசு எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் டிச.27-ம் தேதி முதல் 4 லட்சம் லாரிகள் ஓடாது. பிற மாநிலங்களில் இருந்து லாரிகள் உட்பட 12 லட்சம் மோட்டார் வாகனங்களும் தமிழகத்துக்கு வராது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்