திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரதிமுக மகளிரணி துணை அமைப்பாளர் சவுந்திரம் முத்தரசு தலைமை வகித்தார். மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சேரன்மகாதேவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மல்லிகா அருள் தலைமை வகித்தார்.

தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு தென்காசி தெற்கு மாவட்டதிமுக மகளிரணி அமைப்பாளர் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

வடக்கு மாவட்ட அமைப்பாளர் சைபுன்நிஷா முன்னிலை வகித்தார். மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பூங்கொடி வரவேற்று பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் கண்டன உரையாற்றினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிதம்பர நகர்பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகித்து பேசும்போது, “ பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, கரோனா ஊரடங்கால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது” என்றார்.

எம்எல்ஏக்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சண்முகையா, மாவட்ட மகளிரணி செயலாளர்கள் கஸ்தூரி தங்கம், ஜெஸி பொன்ராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில்

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்