திருவள்ளுவர் பல்கலை, கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக குளறுபடிகளை கண்டித்து ஆசிரியர் சங்கம் போராட்ட அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக நிர்வாக குளறுபடிகளை கண்டித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கத்தின் மண்டலத் தலைவர் ஆசிப் இக்பால், ஓய்வு பெற்ற பேராசிரியர் இளங்கோவன் ஆகியோர் கூறும்போது, ‘‘திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல் வேறு நிர்வாக சீர்கேடுகளும் ஊழல்களும் நடந்து வருகின்றன. விடைத்தாள்களுக்கான காகிதங் களை தமிழகத்தில் வாங்காமல் ராஜஸ்தானில் இருந்து ரூ.80 லட்சத்துக்கு வரவழைத்துள்ளனர். கடந்த மே மாதம் பல்கலைக்கழக தேர்வு நடைபெறாத நிலையில், தற்போது அந்த விடைத்தாள்களை கொடுத்து தேர்வு எழுத கூறுகின்றனர்.

கரோனா காலத்தில் தேர்வு நடத்தக்கூடாது என்றும், அக மதிப்பீட்டு மதிப்பெண் அடிப் படையில் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்பட்டது. ஆனால், அந்த மாணவர்களின் சான்றுகளை திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் தேர்வு எழுத அறிவுறுத் துகின்றனர். மேலும், அந்தத் தேர்வுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.90 பணம் செலுத்துமாறு கூறு கின்றனர்.

ஏற்கெனவே, ஏப்ரல் மாதம் நடத்த வேண்டிய தேர்வுக்கு பணம் செலுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அதே தேர்வு எழுத பணம் செலுத்துமாறு கூறுவது மாண வர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடை பெறும் இத்தகைய நிர்வாக சிக்கல்கள் குறித்து தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இதேபோல், வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குவதிலும், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு உரிய சலுகைகளை பெற்றுத்தருவதிலும் இழுபறிகள் நடைபெற்று வருகிறது. எனவே, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக நிர்வாக குளறுபடிகளை கண்டித்து, வரும் ஜனவரி 6-ம் தேதி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பாகவும், ஜனவரி 11-ம் தேதி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.

அப்போது, சங்கத்தின் செய லாளர் பிரபாகரன், பொருளாளர் சசிகலா, ஓய்வுபெற்ற பேராசிரியர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்