வேலூர் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நிதி தணிக்கை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.
இதில், பல்வேறு குற்றச்சாட்டு கள் மற்றும் நிதி செயல்பாடுகளில் முரண்பாடுகள் இருந்ததால் செஞ் சிலுவை சங்கத்தின் நிர்வாகக் குழுவையும் ‘கில்டு ஆப் சர்வீஸ்’ என்ற சேவா சமாஜத்தின் நிர்வாகக் குழுவையும் மாவட்ட ஆட்சியர் கலைத்ததுடன், சங்கம் தொடர்பான கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கவும் ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டார்.
அதன்படி, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட நிர்வாக கட்டிடத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் ‘சீல்’ வைத்தார்.
இந்நிலையில், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் உள்ள ‘சேவா சமாஜ’ அலுவலகத்தையும் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் தலைமையில் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று ‘சீல்’ வைத்தனர். சேவா சமாஜத்தின் கீழ் வேலூர் காகிதப்பட்டரையில் செயல்படும் உழைக்கும் பெண்கள் விடுதிக்கும் நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்த இரண்டு நிர்வாகத் திலும் முக்கிய பதவியில் இருந்த இந்தர்நாத் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் நிர்வா கக் குழுவை கலைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago