சிதம்பரம் அருகே மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுப்பதில் தவறு நடப்பதாக எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள வயலா மூர் கிராமத்தில் 50 பயனாளிகளுக்கு கால்நடைத்துறை சார்பில் கால் நடை கடன் வழங்கப்பட்டது. இதில் தகுதியில்லாத பயனாளிகளுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளைகணக்கெடுப்பதிலும் தவறு நடந் ததாக கூறி நேற்று இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதே பகுதியில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீஸார் சம்பவஇடத்திற்கு சென்று சாலைமறி யலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவிலை.
இதைத்தொடர்ந்து புவனகிரிவட்டாட்சியர் சுமதி சம்பவ இடத் திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தகுதியுள்ள பயனாளிகளுக்கு கால்நடை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத் தால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago