சிதம்பரம் பகுதியில் மழை, வெள்ள நீரில் பல்வேறு இடங் களிலிருந்து முதலைகள் அடித்துவரப்பட்டு வயல்வெளி, குட்டை, குளம் ஆகியவைகளில் தங்கியுள் ளன. கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தெரு பகுதியில் உள்ள குட்டையில் முதலைகள் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சிநிர்வாகத்திற்கும், வனத்துறையின ருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தால், நேற்று மின் மோட்டர் வைத்து குட்டையிலுள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப் பட்டது. பின்னர் வனச்சரகர் செந் தில்குமார், வனவர் சிவச்சந்திரன், வனக்காப்பாளர் ஆறுமுகம், தோட்ட காப்பாளர் புஷ்பராஜ், ஸ்டாலின், செந்தில் மற்றும் முதலை பிடிக்கும் நந்திமங்கலம் ராஜ் குழுவினர் உள்ளிட்டோர் பல மணிநேர தேடலுக்கு பிறகு முதலையைபிடித்தனர். அந்த முதலையை வனத்துறையினர் எடுத்து சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காராமாரி குளத்தில் விட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago