விருதுநகர் மாவட்டம், காரியா பட்டி அருகே கல்குறிச்சி கிராமத்தில் குண்டாற்றின் குறுக்கே ரூ.10.11 கோடியில் புதிய தடுப்பணை கட்டுவதற் கான பூமி பூஜை நேற்று நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்தார். அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பேசியதாவது: காரியாபட்டி வட்டம், திருச்சுழி மற்றும் பந்தனேந்தல் கண்மாய்களுக்கு போதிய நீர்வரத்து இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இப்பகுதி விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று குண்டாற்றின் குறுக்கே 85 மீட்டர் நீளம், 2.45 மீட்டர் உயரமும், அணையின் நீர் வெளியேற்றும் அளவு 24,580 கன அடியில் ரூ. 10.11 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதனால் பந்தனேந்தல் கண்மாய் மூலம் 56.37 ஏக்கர் நிலங்களும், திருச்சுழி கண்மாய் மூலமாக 488.92 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறும். மேலும், அதன் 1 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள 53 கிணறுகளில் நீர் செறிவூட்டல் மூலம் கல்குறிச்சி, கரியனேந்தல், ஜோகில்பட்டி, கணக்கனேந்தலில் 246.34 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago