பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கம்பிகளுக்கு இடையே சிக்கியவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
கம்பிகளை கடக்கும்போது திடீரென்று அவரது வலது கால் கம்பிகளுக்கு இடையே சிக்கியது. அவரால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கம்பிகளுக்கு இடையே சிக்கியவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியைச் சேர்ந்தவர் ப. தமீம் (39). திருநெல்வேலியிலுள்ள நகைக் கடையில் வர்த்தக பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குழந்தைகளுடன் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்துக்கு நேற்று சென்றார். மைதானத்தின் நுழைவு வாயிலில் கால்நடைகள் உள்ளே வராமல் இருப்பதற்காக தரைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை கடக்கும்போது திடீரென்று அவரது வலது கால் கம்பிகளுக்கு இடையே சிக்கியது. அவரால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு சென்று, கம்பியை அறுத்து தமீமை மீட்டனர்.
இதுபோல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கார் ஷெட்டுக்குள் 24 மணிநேரமாக சிக்கி தவித்த நாய், நேற்று பிற்பகலில் மாநகர காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பத்திரிகையாளர்களின் முயற்சியால் மீட்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago