அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பு மாணவ - மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின்கீழ், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்பினருக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ - மாணவியர் இதற்கான விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்விநிறுவனங்களிலேயே பெற்று பூர்த்திசெய்து அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிச.31-ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago