பள்ளி கட்டிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை

By செய்திப்பிரிவு

முதல்வரின் ‘அம்மா மினி கிளினிக் திட்டம்' தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத் துறை சார்பில்காஞ்சிபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மினி கிளினிக் புதிதாக அமைக்கப்பட்டது.

இந்த மினி கிளினிக்கை அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த விழா முடிந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் சோமசுந்தரத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டனர்.

கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் சேதமடைந்த பள்ளியை முழுமையாக இடித்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இடிக்கப்பட்ட அரசுப் பள்ளி, வகுப்பறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த இடம் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பதாகவும், அந்த இடத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை பொதுப்பணித் துறையிடம் கலந்து பேசி இது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்