இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்தார். பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களைக் கண்டறிந்து சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அப்பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய அளவுக்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளருடன் தமிழ்நாடு முழுவதும் 2,000 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், மாவட்டம் முழுவதும் 73 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி முதல் கட்டமாக சிவகாசியைச் சுற்றியுள்ள சுக்கிரவார்பட்டி, கங்காகுளம், வேண்டுராயபுரம், பள்ளபட்டி, அய்யனார் காலனி, பெரிய பொட்டல்பட்டி, மம்சாபுரம் ஆகிய இடங்களிலும், சாத்தூரை சுற்றியுள்ள ஒத்தையால், சின்னகாமன்பட்டி ஆகிய இடங்களிலும், அருப்புக்கோட்டை அருகே உள்ள கரிசல்பட்டியிலும் என மொத்தம் 10 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் செயல்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago