சதுரகிரி மலைப் பாதையில் மழைக் காலங்களில் பக்தர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர் பாக தேசிய பேரிடர் மீட்புக் குழு வினர் ஆய்வு செய்தனர்.
வில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது பெய்யும் கன மழையால் ஓடைகளிலும், காட்டாறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு மம்சாபுரம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 2015-ம் ஆண்டு கோடை காலத்தில் பெய்த கன மழையால் வனப் பகுதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மழை, வெள்ளக் காலங்களில் உயிரிழப்புகளைத் தடுப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சதுரகிரி மலைப் பாதையில் ஆய்வு செய்தனர். மலைக்குச் செல்லும் வழியில் உள்ள தாணிப்பாறை, சங்கிலிப் பாறை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோயில் பகுதி உள்ளிட்ட இடங்களில் இக்குழுவினர் இரண்டாம் நாளாக நேற்று ஆய்வு நடத்தினர்.
பேரிடர் நேரங்களில் காட்டாற்று ஓடைகள், சிற்றோடைகளைக் கடந்து சென்று மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்த ஆலோசனையும் வழங்கினர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழு மாவட்ட அலுவலர் ஜார்ஜ் தலை மையில் நடைபெற்ற இந்த ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட வீரர் கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago