தேனி மாவட்டத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மானியக் கடன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 20 பேர் தேர்வு செய்யப்படுவர். ஆயிரம் கோழிகள் வளர்க்க 2,500 சதுர அடி இடம் இருக்க வேண்டும். விதவைகள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படுபவர் களுக்கு 5 நாள் பயிற்சியுடன் தினமும் ரூ.150 ஊக்கத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் ரூ.1.5 லட்சம் கடன் வழங்கப்படும். இதில் ரூ.75 ஆயிரம் பின்னேற்பு அரசு மானியமாக வரவு வைக்கப்படும். தகுதியுடையோர் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago