தமிழக அரசின் அம்மா சிமென்ட் விலை ஒரு மூட்டை ரூ.190-ல் இருந்து ரூ.216 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் அம்மா சிமென்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களுக்கு சலுகை விலையில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.190 என வழங்கப்பட்டு வந்தது. தற்போது மூலப் பொருட்களின் விலை யேற்றம் காரணமாக ஒரு மூட்டை சிமென்ட் ரூ.216 என்ற விலையில் வழங்கப்படும். இத்திட்டத் தின் கீழ் சிமென்ட் பெற ஏற்கெனவே பழைய விலைக்கு வங்கி வரைவு சமர்ப்பித்த பயனாளிகளுக்கு பழைய விலையிலேயே சிமென்ட் வழங்கப்படும்.
முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புதிட்ட பயனாளிகள் மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் தங்களது வீடுகள் கட்டுமானப் பணிக்குத் தேவைப்படும் சிமென்டினை உரிய விதிமுறைகளை பின்பற்றி, இத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்து பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago