காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ரூ.3 கோடியே 63 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது, காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் 5-வது வார்டில் கழிவுநீர் கால்வாய், தார் சாலை அமைக்கும் பணிகள், கரகூர் பகுதியில் உள்ள வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.69.91 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குப்பை தரம் பிரிக்கும் பணிகள், ரூ.2 கோடியே 44 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் கழிவு நீர் அகற்றம் செய்யும் திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.3 கோடியே 63 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என பேரூராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பேரூராட்சி உதவி இயக்குநர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, செயல் அலுவலர் பொன்னுசாமி, இளநிலை பொறியாளர் நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago