சாத்தனூர் அணைக்குநீர்வரத்து குறைந்தது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நேற்று நீர்வரத்து குறைந்தது.

தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து தொடர்வதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் சுமார் 20 அடி உயர்ந்துள்ளது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 99.40 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 335 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 3,667 கனஅடி தண்ணீர் உள்ளது.

இந்நிலையில், அணைக்கு வரும் நீர்வரத்து திடீரென குறைந்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 194 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 99.45 அடியை எட்டியது. அணையில் 3,674 மில்லியன் கனஅடியாக உள்ளது.

60 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 43.13 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 121 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 349.75 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 20 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி தண்ணீரும், வெளியேற்றப்படுகிறது. அணையில் 70 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 58 அடியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அணைக்கு விநாடிக்கு 75 கனஅடி தண்ணீர் வருகிறது. அவை, அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையில் 242 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்