காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் வேளாண் சட்டங் களுக்கு எதிராக திருப்பத்தூர் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணி நடை பெற்றது.

திருப்பத்தூர் அடுத்த புதுக் கோட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணி நேற்று நடை பெற்றது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணிக்கு காங்கிரஸ் கட்சியின் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.

திருப்பத்தூர் தொகுதி சட்டப் பேரவை பொறுப்பாளர் பரத், ஒன்றியத் தலைவர்கள் மணி, சாந்தசீலன், சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பங்கேற்றவர்கள் மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவா கவும் முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்