ஆரணியில் மயானத்துக்கு செல் லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள் ளதைக் கண்டித்து, உயிரிழந்தவர் உடலுடன் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் ஆரணி நகரம் கொசப்பாளையம் களத்து மேடு பகுதியில் வசிப்பவர்கள், திருமலைசமுத்திரம் ஏரி அருகே உள்ள மயானத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த மயானத்துக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிர மித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், களத்துமேடு பகுதியில் வசிக்கும் சுந்தரமூர்த்தி என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. இதை யடுத்து, அடக்கம் செய்வதற்காக அவரது உடலை மயானத்துக்கு உறவினர்கள் கொண்டு சென்ற னர். அப்போது, பாதை ஆக்கிர மிக்கப்பட்டிருந்ததால், மயானத் துக்கு உடலை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்கள், விவசாய நிலம் வழியாக உடலை கொண்டு செல்ல முயன்றனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொது மக்கள், ஆரணி - தேவிகாபுரம் சாலையில் உயிரிழந்தவர் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த ஆரணி நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வருவாய்த் துறை மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதைத்தொடர்ந்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. பின்னர், மாற்றுப் பாதையில் சுந்தரமூர்த்தியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago