ஆண்டிப்பாளையம் சாலையை சீரமைக்க திமுக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் தார் சாலையை சீரமைத்துத்தர வலியுறுத்தி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திமுகவினர் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட வடக்கு திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தலைமையில் திமுகவினர்,ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே ஆண்டிப்பாளையம் குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆண்டிப்பாளையம் முதல் சின்னாண்டிபாளையம் பிரிவு வரை சுமார் 3 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை முழுமையாக தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு, மண் மேடுகளாகவும், புதைகுழிகளாகவும் காட்சியளிக்கின்றன. இந்த சாலை பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன்படுத்துவதால் சாலையில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். சாலையின் இருபுறமும் ஏற்படும் மண் புழுதியால் மக்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. உடனடியாக சாலையை சீரமைத்துத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்