காலாண்டு வரி ரத்து, குறிப்பிட்ட நிறுவனங்களின் வேகக்கட்டுப்பாட்டு கருவி தான் பொருத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் வரும் 27-ம் தேதி காலை 6 மணி முதல் தமிழ கத்தில் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கிருஷ்ணகிரியில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் வேலை நிறுத்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர், திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமை யாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை தொடர்ந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை விடுத்து வரும் 27-ம் தேதி காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். தற்போது ஜிபிஎஸ் கருவி பொருத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜிபிஎஸ் கருவிகளுக்கு 140 நிறுவனங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் மாநில அரசு குறிப்பிட்ட 8 நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எங்கள் வாகனங்களை எப்சி செய்வதில் மிகப்பெரிய கெடுபிடியை காட்டுகிறார்கள்.
வேலை நிறுத்தத்தில் நான்கரை லட்சம் கனரக வாகனங்கள் பங்கு கொள்கின்றன. சிறிய வாகனங்கள், டாடா ஏஸ், கார் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் எங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago