காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 7 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள்: அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் தொடங்கி வைத்தனர்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 7 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

காஞ்சி மாவட்டத்தில் பெரும்புதூர் அருகே உள்ள போந்தூரில் காஞ்சி ஆட்சியர் மகேஸ்வரி முன்னிலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.

இம்மாவட்டத்தில் மேலும் 26 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாவலூர், ஓரிக்கை ஆகிய இடங்களிலும் மினி கிளினிக்குள் திறக்கப்பட்டன.

திருவள்ளூரில்…

திருவள்ளூர் மாவட்டத்தில் 53 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக ஆவடி- சேக்காடு, தண்டுரை, நெமிலிச்சேரி, நடுக்குத்தகை ஆகிய இடங்களில் 4 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கும் பணி முடிவுக்கு வந்ததையடுத்து இந்த மினி கிளினிக்குகள் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில், சிறப்பு விருந்தினராக ஆவடி எம்எல்ஏவும், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான பாண்டியராஜன் பங்கேற்று, அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்