தேனியில் வளர்ச்சி திட்டப் பணிகள் துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டம் எண்டப்புளி ஊராட்சியில் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.46 லட்சம் மதிப்பிலான விவசாயிகள் பயிற்சி மையம் மற்றும் கிட்டங்கியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார்.

பின்னர் தேவதானப்பட்டியில் கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க அலுவலகக் கட்டிடத்தை துணை முதல்வர் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து 157 பயனாளிகளுக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். காமயக்கவுண்டன்பட்டியில் அங்கன்வாடி மையம், கோகிலாபுரம், அம்பாசமுத்திரம் உட்பட 8 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்