கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து 50 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார். இவ்விழாவில் ஆட்சியர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து சுமார் 50 அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன. அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருத்துவமனை பணியாளர் இடம் பெறுவர். கிராமப்புற பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சிகிச்சை நேரமாக இருக்கும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago