திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டிச.16-ம் தேதி முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 16, 17-ம் தேதிகளில் இரவு முழுவதும் விடாமல் தொடர்ச்சியாக மழை பெய்தது.
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயலின்போது பெய்த கனமழையில் தப்பிய சம்பா பயிர்கள் தற்போது மழைநீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் இந்த பயிர்களில் நெற்கதிர்கள் பதராக மாறும் நிலை உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் சில நாட்களாக மழை விட்டிருந்த நிலையில், கடந்த 16-ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், விளைநிலங்களிலும் மழைநீர் தேங்கியது.
திருநள்ளாறு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பேட்டை கிராமத்தில், மழையால் பாதிக் கப்பட்ட பகுதிகளை புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago