வேலூர் மாவட்டத்தில் நீர் நிரம்பியுள்ள ஏரிகளின் கரைகளை சேதப்படுத்தும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயலின் தாக்கத்தால் முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகம் ஏற்பட்டு பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பாலாறு, கவுன்டன்யா, பொன்னை, அகரம் ஆறுகளை நம்பியுள்ள முக்கிய ஏரிகள் மற்றும் அதனை தொடர்ந்துள்ள இரண்டாம் நிலை ஏரிகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து கிடைத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் மொத்தம் 134 ஏரிகள் உள்ளன. இதில், 20 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 75 சதவீதத்துக்கு மேல் 12 ஏரிகளிலும், 50 சதவீதத்துக்கு மேல் 22 ஏரிகளும் நிரம்பியுள்ளன. மாவட் டத்தில் மொத்தமுள்ள 816 குளங்களில் 76 முழுமையாக நிரம்பியுள்ளன. 215 குளங்களில் 50 சதவீதத்துக்கும் அதிக மாக நிரம்பியுள்ளன.
அதேபோல், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 40-ல் முழு கொள்ளளவு எட்டி யுள்ளது. 5 ஏரிகளில் 75 சதவீதத் துக்கு மேல், 7 ஏரிகளில் 50 சதவீதத் துக்கும் மேல் நீர் நிரம்பியுள்ளன.
இதற்கிடையில், முழு கொள்ளள வும், 75 சதவீதத்துக்கும் அதிகமாகவும் நீர் நிரம்பிய ஏரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஏரிகளில் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஏரிக் கரையையொட்டி வசிக்கும் சிலரால் ஏரிக்கரையை சேதப்படுத்தி தண் ணீரை வெளியேற்றும் ஆபத்து இருக் கிறது. இதனால், ஏரிகளில் சேமிக்கப் பட்ட நீரை வீணடிக்கும் நிலை ஏற்படு வதுடன் எதிர் வரும் கோடை காலத் தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, நீர் நிரம்பிய ஏரிகளின் பாது காப்பு குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது,‘‘உள்ளாட்சி அமைப்புகளின் அதி காரிகள், பொதுப்பணித்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் என 4 குழுக்கள் ஏரிகளின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகின் றனர். இந்த குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
குடியாத்தம் தட்டாங்குட்டை ஏரிக் கரை மர்ம நபர்களால் சேதப்படுத்திய தாக தகவல் தெரியவந்தது. அது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், அவ்வாறு தவறான சம்பவம் எதுவும் இல்லை என தெரியவந்தது. ஏரிக் கரைகளை சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றுவது பொதுமக்கள், கால் நடைகளின் உயிருக்கு ஆபத்தானது.
இதுபோன்ற சம்ப வங்களில் தவறு செய் யும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago