திருப்பூர் வழக்கறிஞர்கள், மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் நாளை திறப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான நவீன ஒருங்கிணைந்த நீதிமன்றம் நாளை (டிச.19) திறந்து வைக்கப்படவுள்ளது.

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூர், கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சி யாகவும், 2009-ம் ஆண்டு தனி மாவட்டமாகவும் உருவானது. அன்றுமுதல் மாவட்ட நீதிமன்றம்லட்சுமிநகரில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டுவருகிறது. குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் குமரன் சாலையில் உள்ள கட்டிடங்களில் செயல்பட்டுவருகின்றன.

நீதிமன்றங்கள் தனித்தனி பகுதிகளில் இருந்த காரணத்தால் பொதுமக்கள் அலைச்சலை சந்தித்து வந்தனர். அதோடு வழக்கறிஞர்களும் குறிப்பிட்ட நேரங்களுக்கு மாவட்ட மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் ஆஜராவதில்பிரச்சினை ஏற்பட்டது. இதனால் திருப்பூரில் அனைத்து நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டது. இதையடுத்துதிருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து, 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.37 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களுக்கான அறைகள், நீதிபதிகளுக்கான அறைகள், வழக்கறிஞர்களுக்கான அறைகள், மாற்று தீர்வு மையம், பொதுமக்கள், காவல் துறையினர் ஓய்வு அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் எனநீதித் துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப்ஷாகி, காணொலி வாயிலாக ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தை திறந்து வைக்கவுள்ளார். விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எஸ்.வைத்யநாதன், டி.கிருஷ்ணகுமார், ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன், காவல் ஆணையர்க.கார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் மற்றும் அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்